This Article is From May 04, 2020

ஆண் மயில் பறக்கும் அற்புத காட்சி! இணையத்தில் லைக்சை குவிக்கும் 9 வினாடி வீடியோ!!

மற்ற பறவைகளைக் காட்டிலும் மயில்கள் அதிக எடையைக் கொண்டவை. இதனால் அவற்றால் கழுகு, பருந்துகளைப் போன்று நீண்ட தூரத்திற்கு பறக்க முடியாது.

ஆண் மயில் பறக்கும் அற்புத காட்சி! இணையத்தில் லைக்சை குவிக்கும் 9 வினாடி வீடியோ!!

வீடியோ காட்சியை ட்விட்டரில் பிரபல வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பதிவிட்டுள்ளார்.

தரையில் இருந்து மரத்தின் கிளையை நோக்கி ஆண் மயில் ஒன்று பறக்கும் அற்புதக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பறவை இனங்களில் மிகுந்த அழகாக காட்சி அளிக்கக்கூடியவை மயில்கள். மழை வரும் நேரத்தில் ஆண்மயில்கள் தோகையை விரித்து ஆடும் காட்சிகள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். 

மயில்கள் நடந்தாலும் அழகு; பறந்தாலும் அழகுதான். அந்த வகையில் தரையில் இருந்து மரத்தின் கிளையை நோக்கி ஆண்மயில் அழகாக பறக்கிறது. இந்தக் காட்சிதான் தற்போது இணையத்தில் அதிக விருப்பங்களை பெறும் வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது.
 

இதனை வன விலங்குகளை புகைப்படம் எடுக்கும் ஹர்ஷா நரசிம்ம மூர்த்தி என்பவர் ராஜஸ்தானின் ரான்தம்போர் தேசிய உயிரியல் பூங்காவில் வைத்து வீடியோவாக எடுத்துள்ளார். 

காட்சியில் 2 ஆண் மயில்கள் உள்ளன. ஒன்று சாதாரணமாக நடக்க மற்றொன்று சிறகை விரித்து மரக்கிளையை நோக்கி பறக்கத் தொடங்குகிறது. மயில் சுமார் 6 அடி நீளம் இருக்கும். அதன் இறக்கைகள் மட்டுமே உடலில் மொத்த நீளத்தில் 5-ல் 3 பங்காக உள்ளது. 

இந்த வீடியோ காட்சியை ட்விட்டரில் பிரபல வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பதிவிட்டுள்ளார். 

நந்தா பதிவிட்ட சில மணி நேரங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையை இந்த வீடியோ கடந்துள்ளது. மயில் பறக்கும் அழகை ரசித்து நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். 

மற்ற பறவைகளைக் காட்டிலும் மயில்கள் அதிக எடையைக் கொண்டவை. இதனால் அவற்றால் கழுகு, பருந்துகளைப் போன்று நீண்ட தூரத்திற்கு பறக்க முடியாது. 

Click for more trending news


.