சாதிக் கோச்சடாலி என்கிற நபர், தனது அருகிலிருந்த ஒரு குடை பறந்துவிடாமல் தடுக்க அதன் அடியில் இருக்கும் தட்டு மீது ஏறினார்.
புயல் காற்று, சூரைக்காற்று என பலவற்றைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு ஆளையே குடையுடன் தூக்கிப் போகும் காற்று பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா?
தற்போது அப்படியொரு விஷயம் நடந்தது மட்டுமல்ல, அந்த சம்பவம் சிசிடிவி வீடியோவிலும் பதிவாகியுள்ளது. துருக்கியின் ஒஸ்மானியே மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் அதிக வேகத்துடன் புயல் காற்று வீசியுள்ளது. அப்போது சாதிக் கோச்சடாலி என்கிற நபர், தனது அருகிலிருந்த ஒரு குடை பறந்துவிடாமல் தடுக்க அதன் அடியில் இருக்கும் தட்டு மீது ஏறினார்.
வீடியோ கீழே:
அடுத்த ஓரிரு நொடிகளில் குடை, சாதிக்குடன் அந்தரத்தில் தூக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோதான் தற்போது உலக வைரல் ஆகியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து சாதிக், டெய்லி சபா என்கின்ற செய்தி நிறுனத்திடம் பேசியுள்ளதாக தெரிகிறது. சாதிக் சம்பவம் குறித்து பேசுகையில், ‘எனக்கு இந்த சம்பவத்தில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை. அந்தரத்தில் குடை தூக்கப்பட்ட உடன், ஒரு குறிப்பிட்ட உயரம் சென்றது. அப்போதே நான் சுதாரித்து கீழே குதித்து விட்டேன். ஒரு 3 அல்லது 4 மீட்டர் வரை குடை உயர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்' என்றுள்ளார்.
சாதிக்கிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், குடை திரும்பவும் தரையில் இறங்கியபோது, ஒருவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Click for more
trending news