This Article is From Nov 07, 2018

ம.பி.தேர்தலுக்கு 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வியாபம் ஊழல் மற்றும் மான்ட்சார் கிளர்ச்சியால் பாஜகவின் ஆதரவு குறைந்துவிடும் என பலர் கருதுகின்றனர்.

ம.பி.தேர்தலுக்கு 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா இருவரும் பாஜக தேர்தல் பிரசாரத்தை முன்னிருந்து நடத்துவார்கள்.

Bhopal:

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உட்பட 40 நாட்சத்திர பிரசார பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாத இறுதியில் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் சிவராஜ் செளகான் வெற்றி பெறுவார் என்று பாஜக எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வரை தேர்தல் பிரசாரத்தில் இடுபடும் 40 நட்சத்திர பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக 15 வருடங்களாக அதிகாரத்தில் உள்ளது. அதில் 2013ல் அமோக வெற்றியடைந்தது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வியாபம் ஊழல் மற்றும் மான்ட்சார் கிளர்ச்சியால் பாஜகவின் ஆதரவு குறைந்துவிடும் என பலர் கருதுகின்றனர். காங்கிரஸை சேர்ந்த கமல்நாத் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா, தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

பாஜக வெளியிட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், பாஜக தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்தநாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நவ.28ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 11ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இதனிடையே சிகோர் மாவட்டத்தில் நேற்று சிவராஜ் செளகான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 

.