This Article is From Aug 20, 2020

கொரோனா குணமடைந்த பின்னர் வேறு பாதிப்புகள் வருகிறதா..? - அரசு திறந்த தொடர் கண்காணிப்பு மையம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிற பிரச்னைகள், பின் நாட்களில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா குணமடைந்த பின்னர் வேறு பாதிப்புகள் வருகிறதா..? - அரசு திறந்த தொடர் கண்காணிப்பு மையம்!

எந்த இடத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தொற்று பாதிப்பு சரியான பின்னர், இந்த மையத்தில் வந்து சோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது
  • சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
  • மதுரையில் விரைவில் இன்னொரு மையம் அமைக்கப்பட உள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகும் வேறு ஆரோக்கிய பிரச்னைகள் வந்தால், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள தமிழக அரசு, தொடர் கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது. 

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில், கொரோனா சிறப்பு தொடர் கண்காணிப்பு மையத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தொடக்கி வைத்தார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிற பிரச்னைகள், பின் நாட்களில் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு இந்த மையம் உதவியாக இருக்கும் எனப்படுகிறது. தமிழகத்தில் எந்த இடத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தொற்று பாதிப்பு சரியான பின்னர், இந்த மையத்தில் வந்து சோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 4 வாரத்துக்குப் பின்னர், அதாவது ஒரு மாதம் கழித்து இந்த மையத்துக்கு வந்து பயன் பெறலாம். ஐசியூ பிரவில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், இந்த மையத்தை முக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரையில் இதைப் போன்ற ஒரு தொடர் கண்காணிப்பு மையத்தை உருவாக்க இருக்கிறோம். அதேபோல தமிழகத்தில் உள்ள பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதைப் போன்ற மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். 

.