மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கும் ஓட்டுனர்.
Siliguri: நாடு முழுவதும் இன்று அரசு ஊழியர் சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பதற்றம் அதிகரித்திருப்பதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பஸ் டிரைவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து ஓட்டினர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்று, அம்மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 22 சதவீத பேருந்துகள் இயங்குவதாக போக்குவரத்து துறை கூறியுள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து முழு அடைப்பு நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி.உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஊதிய உயர்வு, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் பி.எம்.எஸ். எனப்படும் பாரதிய மஸ்தூர் சங்கம், முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் பல்வேறு இடங்களில் சில வங்கிக் கிளைகளில் பணிகள் இன்று பாதிப்பு அடைந்தன.