This Article is From Mar 26, 2019

உடல் எடை குறைக்க புரோட்டின் உள்ள இந்த உணவைக் எடுத்துக் கொள்ளுங்கள்...!

Weight loss: புரதச்சத்தும் ஆரோக்கியமான கார்போஹைட் ரேட் மற்றும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவுகிறது

உடல் எடை குறைக்க புரோட்டின் உள்ள இந்த உணவைக் எடுத்துக் கொள்ளுங்கள்...!

Weight loss: பருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகமுள்ளது.

ஹைலைட்ஸ்

  • உடல் எடை குறைக்க ஒற்றை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது
  • கார்போஹைட் ரேட் மற்றும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவுகிறது
  • சிக்கனில் புரதச்சத்தும் அமினோ ஆசிட்ஸும் நிறைந்துள்ளது.

உடல் எடை குறைப்பு என்றால் மிக முக்கியமாக பேசுவது ஊட்டச்சத்து மிக்க உணவைப் பற்றித்தான் இருக்கும். அதே நேரத்தில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் எடைக் குறைக்க வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான டயட் , உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ஸ்நாக்ஸ் வகைகளான இனிப்பு மற்றும் கார்போஹைட் ரேட் சாப்பிட வேண்டும் என்று உணர்வை வெகுவாக குறைக்க வேண்டும். அன்றாடம் 2 அல்லது 3 மூன்று உணவுகள் ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். புரதச்சத்தும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்த கட்டுரை ஆரோக்கியமான உணவை பற்றிக் கூறுகிறது. 

gqpok6to

உடல் எடை குறைக்க புரதச்சத்து  உள்ள உணவுகள் 

1. முட்டை மற்றும் தானியங்கள்

முட்டையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. உடல் எடை குறைப்புக்கான டயட் பட்டியலில் நிச்சயம் இடம் பெற வேண்டிய ஒன்று. முட்டையில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் முட்டையில் உள்ளன. அன்றாடம் காலை நேரத்தில் ஊட்ட்சத்துமிக்க உணவாக முட்டையை சாப்பிட்டு உற்சாகமாகத் தொடங்கலாம். 

2. பருப்பு மற்றும் அரிசி 

பருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகமுள்ளது. முக்கியமான அமினோ ஆசிட்ஸ்கள் குறைவாக உள்ளது. பிரவுன் ரைஸ் மற்றும் பருப்பினை சேர்த்து சாப்பிட்டால் முழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்கும்.  

3. தயிர் மற்றும் பழங்கள்

பால் பொருட்களில் குறிப்பாக தயிரில் கால்சியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளது. தயிருடன் சில பழங்களை வெட்டி கலந்து சாப்பிடலாம். அல்லது சில ஸ்மூத்திகளை வீட்டிலே தயாரித்து சாப்பிடலாம். இதனுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து சரியான பேலன்ஸ் உள்ள உணவாக இருக்கும். உடல் எடையை வெகுவாகக் குறைக்க டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

4. சிக்கன் மற்றும் காய்கறிகள் 

சிக்கனில் புரதச்சத்தும் அமினோ ஆசிட்ஸும் நிறைந்துள்ளது. சிக்கன் சாலட் அல்லது சில காய்கறிகளான புரோக்கோலி, கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை கலந்து சாப்பிடலாம். சிக்கனுடன் காய்கறிகளை வதக்கி சாப்பிடலாம். வீகன் டயட்டை பின்பற்றுகிறவர்கள் சிக்கனுக்கு பதிலாக டோபு அல்லது பனீரை பயன்படுத்தலாம். 

5. கொண்டைக் கடலை மற்றும் முட்டை 

கொண்டைக் கடலையில் புரதச் சத்தும் நார்ச்சத்தும் அதிகமுள்ளது. வேகவைத்த கொண்டைக் கடலையுடன் வேகவைத்த முட்டையும் கலந்து சாப்பிடலாம். சுவைக்காக வெங்காயம், கொத்தமல்லி, சிறிதளவு லெமன் ஜூஸை பயன்படுத்தலாம். நீண்ட நேரம் பசி தாங்கும் உணவாக இது இருக்கும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

.