This Article is From Oct 15, 2018

முதன்முறையாக ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு இந்தியா - சீனா கூட்டுப்பயிற்சி

இந்தியா - சீனா - ஆப்கானிஸ்தான் நாடுகளின் ஒத்துழைப்புக்கு இந்த பயிற்சி முதல்கட்டமாக அமையும் என சீன தூதர் தெரிவித்துள்ளார்

முதன்முறையாக ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு இந்தியா  - சீனா கூட்டுப்பயிற்சி

சீனா தூதர் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆப்கானிஸ்தான் தூதர்கள்

New Delhi:

இந்தியாவும், சீனாவும் ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை இன்று தொடங்கி உள்ளன. இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் மாற்றங்கள் ஏற்படும் என்று சீன தூதர் லியோ ஸோகி தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக இந்தியாவும், சீனாவும் சேர்ந்து ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியாவும் சீனாவும் எதிர் எதிர் துருவங்களாக உள்ளன.

ஆப்கானிஸ்தான் பிரச்னையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அரசு தலிபான்களுக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

இந்த நிலையில்தான் ஆப்கானை சேர்ந்த 10 தூதர்கள் டெல்லியில் இந்தியா மற்றும் சீன அதிகாரிகளிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பூடான், நேபாளம், மாலத்தீவுகள், மியான்மர், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என சீன தூதர் லியோ ஸோகி விருப்பம் தெரிவித்துள்ளார்.

.