This Article is From Oct 12, 2019

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார்.

இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி
New Delhi:

2019-ம் ஆண்டு இந்தியாவின் செல்வந்தர்களுக்கு சவாலான காலம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்பஸின் 2019 வியாபார அதிபர்களின் மொத்த செல்வத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் வறுமையை குறைக்க உதவிகிறார்கள். அவர்கள் மரியாதை மற்றும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் என்று கூறியிருந்தார். 

ஃபோர்பஸ் இந்திய பணக்கார பட்டியல் 2019 ல் தொழிலதிபர் கெளதம் அதானி 8 இடங்கள் தாண்டி 15.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது பணக்கார இந்தியராக திகழ்ந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து  முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். 

அசோக் லேலண்ட் உரிமையாளர்கள் இந்துஜா சகோதரர்கள் 15.6 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பல்லோன்ஜி மிஸ்திரி 15 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் நான்காவது இடத்தையும், கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் 14.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஐந்தாவது இடத்தையும், எச்.சி.எல் டெக்னாலஜிஸின் ஷிவ்  நாடார் 14.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ளவராக உள்ளார்.

முகேஷ் அம்பானி தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக பணக்கார இந்தியராக திகழ்கிறார். அவர் தனது நிகர மதிப்பில் 4.1 பில்லியன் டாலர்களை கூடுதலாக சேர்த்துள்ளார், ஏனெனில், தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ தொலைத் தொடர்பு பிரிவு, 340 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கேரியர்களில் ஒன்றாகும்." ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் பைஜூவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரன்  1.91 பில்லியன் டாலர் நிகர சொத்துடன் 72 வது இடத்திலும், மனோகர் லால் மற்றும் ஹல்திராம் ஸ்நாக்ஸின் மதுசூதன் அகர்வால் 86 வது இடத்திலும்  1.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உள்ளனர்.  ஜாகுவரின் ராஜேஷ் மெஹ்ரா, 95 வது இடத்தில் உள்ளனர். 1.5 பில்லியன் டாலர் நிகர மதிப்பு மற்றும் அஸ்ட்ரல் பாலி டெக்னிக் நிறுவனத்தின் சந்தீப் 1.45 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உள்ளனர். 

.