Forbes World's 100 Most Powerful Women: நிர்மலா சீதாராமன் 34 வது இடத்தை பிடித்துள்ளார்
New Delhi: ஃபோர்பஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார்.
ஃபோர்பஸ் ஆண்டுதோறும் அரசியல், தொழிற்துறை, கருணை மனம மற்றும் ஊடகங்களில் தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடுவது வழக்கம். இதில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் முதலிடத்தை பெற்றுள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தையும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (29) உள்ளார்.
இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகமாக நிர்மலா சீதாராமன் 34 வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முதல் நிதியமைச்சர் மேலும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த பட்டியலில் நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல் கார்ப்பரேஷின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
இந்த பட்டியலில் 65வது இடத்தில் எம்.எஸ். மஜூம்தார்-ஷா- இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் தன் முயற்சியில் பணக்காராக ஆன பெண். 1978 ஆம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் நிறுவனர் ஆவார்.
பயோகான் நிறுவனம் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இரண்டு வெவ்வேறு பயோசிமிலர்கள் மருந்துகளுக்கு USFDAவிடம் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனமாகும்.
இந்த பட்டியலில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இணைத்தலைவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் (6)வது இடத்திலும், ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி (9) இடத்திலும், பேஸ்புக் சிஇஓ ஷெரில் சாண்ட்பெர் 19வது இடத்திலும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 38வது இடத்திலும் உள்ளனர்.
அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மகள் இவான்கா ட்ரம்ப் 42 இடத்தை பிடித்தார். டென்னிஸ் வீராங்கணை செரினா வில்லியம்ஸ் 81 வது இடத்திலும் கால நிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் 100வது இடத்திலும் உள்ளார்.