ஹைலைட்ஸ்
- அரச்சலூரில் வனக்காவலராக பிரபு பணியாற்றி வருகிறார்
- பொதுமக்கள் சிலர், வனக்காவலரின் தாயாரிடம் விவரத்தை கூறியுள்ளனர்
- பிரபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
ஈரோடு பகுதி வனக் காவலரை நான்கு பேர் கொண்ட குழு கடத்தி சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். 30வயது வனக்காவலரான பிரபு சிலரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறியிருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, அவரை கடத்தி சென்று துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரச்சலூரில் வனக்காவலராக பிரபு பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, நான்கு சக்கர வாகனத்தில் வந்த கடத்தல்காரர்கள், வனக்காவலர் பிரபுவை காரில் ஏற்றிக் கொண்டு தப்பித்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர், வனக்காவலரின் தாயாரிடம் விவரத்தை கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து, பிரபுவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்சமையத்தில், வனக்காவலர் பிரபு காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பிரபு சிலரிடம் பணம் பெற்றுள்ளதால், அவரை கடத்தி சென்றிருக்கலாம் என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபுவிடம் விசாரணை நடத்தியுள்ள காவல் துறையினர், கடத்தல் கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)