Read in English
This Article is From Jun 25, 2018

ஒடிசாவின் ஒரே வீட்டில் 100 நாக பாம்பு… மிரண்ட வனத்துறையினர்!

ஒடிசாவின் பாத்ராக் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட நாக குட்டிகளும், இரண்டு பெரிய நாக பாம்புகளும் மீட்கப்பட்டுள்ளன. 

Advertisement
நகரங்கள்

Highlights

  • ஏறக்குறைய 110 நாகப் பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன
  • 20 நாகப் பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன
  • 2 மீட்டர் உயரம் கொண்ட 2 நாகப் பாம்புகளும் மீட்கப்பட்டுள்ளன
Bhadrak, Odisha: ஒடிசாவின் பாத்ராக் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட நாக குட்டிகளும், இரண்டு பெரிய நாக பாம்புகளும் மீட்கப்பட்டுள்ளன. 

பாத்ராக் மாவடத்தில் இருக்கும் பைகாஷி கிராமத்தில் வசித்து வருபவர் பிஜய் புயான். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவரது வீட்டில் நாக பாம்புகள் திரிந்துள்ளதைப் பார்த்து மிரட்சியடைந்துள்ளார், வீட்டிற்கு சொந்தக்காரர். இதையடுத்து, அவர் வனத் துறையினருக்கு சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

வனத்துறையினர், எஸ்.கே.மிஸ்ரா என்னும் பாம்பு மீட்பருடன் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை மாலை வந்துள்ளனர். புயான் வீட்டில் கிட்டத்தக்க 5 மணி நேரம் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் வேலையை செய்துள்ளனர் வனத்துறையினர். இதையடுத்து, ஏறக்குறைய 110 நாக குட்டிகளும் 20 நாக முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று 2 பெரிய நாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகளின் உயரம் 2 மீட்டருக்கு மேல் இருந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், ‘பிடிக்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடப்படும். மேலும், ஹடகார் வன உயிரியல் பூங்காவில் பாம்புகளை விடுவது பற்றியும் பேசி வருகிறோம்’ என்றனர். 

Advertisement
புயான் குறித்து பைகாஷி கிராம மக்கள், ‘நாக பாம்புகள் வீட்டுக்குள் இருப்பது புயானுக்குத் தெரியும். அதை அவர் வழிபட்டு வந்தார்’ என்று கூறியுள்ளனர். 

 
Advertisement
Advertisement