This Article is From Nov 10, 2018

நண்பரின் வீட்டில் நடந்த சோதனையை தடுக்க முயன்ற முன்னாள் எம்.பி!

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் வீட்டிற்குள் நுழைவதை நிறுத்திவிட்டார்.

நண்பரின் வீட்டில் நடந்த சோதனையை தடுக்க முயன்ற முன்னாள் எம்.பி!

சோதனைக்கான அனுமதி ஆணை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார் ராஜகோபால்.

Hyderabad:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எல்.ராஜகோபால் தனது நண்பரின் இல்லத்தில் நடந்து வரும் போலீசாரின் சோதனை முயற்சியைத் தடுக்க முயன்றார்.

ஜுப்லி ஹில்ஸில் உள்ள தொழிலதிபர் ஜி.பி.ரெட்டியின் வீட்டில் இன்று சோதனை செய்வதற்காக போலீசார் அங்கு வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த, ராஜகோபால் உடனடியாக ஜி.பி.ரெட்டி விரைந்து சென்றார். அங்கு அவர் சோதனைக்கான அனுமதி ஆணை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் வீட்டிற்குள் நுழைவதை நிறுத்திவிட்டார். சி.பி.ஐ.யின் விசாரணையில் அவரது நண்பர் ஒத்துழைப்பு வழங்கிய போதிலும் நள்ளிரவு சோதனை நடத்தியதன் மூலம் போலீசார் தனது நண்பர் ஜி.பி.ரெட்டிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் அவர் கூறினர்.

துணை ஆய்வாளர் ஒருவர் தனது தொலைபேசியில் அவரது மூத்த அதிகாரிகளுடன் பேசிய போது, ராஜகோபால் போனை அவரிடம் இருந்து பறித்து மூத்த அதிகாரியிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் இந்த சோதனைக்கு பின்னால் ஐஜி.நாகிரெட்டி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரெட்டி பறிமுதல் செய்ய முயன்றதாக அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை ஆணையாளர் ஏ.ஆர்.ஸ்ரீநிவாஸ் கூறும்போது, வழக்கு நடைபெறும் போது குற்றம்சாட்டப்பட்டவர்களை எப்போது வேண்டுமானாலும் விசாரிக்க உரிமை உள்ளது என அவர் கூறியுள்ளார்.
 

.