This Article is From Feb 18, 2019

“புல்வாமா தாக்குதலுக்கு என்ன காரணம்?”- ‘ரா’ அமைப்பின் மாஜி தலைவர் அதிர்ச்சி தகவல்

இந்தியா, சர்வதேச நாடுகளிடம், ‘தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானை நடவடிக்கை எடுக்க வையுங்கள்’ என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 

“புல்வாமா தாக்குதலுக்கு என்ன காரணம்?”- ‘ரா’ அமைப்பின் மாஜி தலைவர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு’ என்ற அந்தஸ்தை வாபஸ் பெற்றுள்ளது இந்தியா.

Hyderabad/New Delhi:

சில நாட்களுக்கு முன்னர் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார், இந்திய உளவு அமைப்பான ‘ரா'-வின் முன்னாள் தலைவர் விக்ரம் சூத். 

கடந்த வியாழக் கிழமை, ஜம்மூ-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவர், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினார். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் இந்த தாக்குதலுக்கு காரணம் எனப்படுகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்க்குத் தக்க பதிலடி கொடுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட அரசு தரப்பு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

vqc5fie

 

இப்படிப்பட்ட சூழலில் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் வினோத் சூத், “புல்வாமா தாக்குதல் என்பது, பாதுகாப்பு நடவடிக்கையில் குறைபாடு இல்லாமல் நடந்திருக்காது. இந்தத் தாக்குதலுக்கு என்ன காரணம் என்று உறுதியாக எனக்குத் தெரியாவிட்டாலும், இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு முக்கிய காரணம்” என்று கூறியுள்ளார். 

அவர் மேலும், “இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஒரு நபர் மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. வெடி மருந்துகளை ஒருவர் வாங்கி வந்திருப்பார். அதை ஒருவர் வெடிக்கும்படி செய்திருப்பார். ஒருவர், காரை வாங்கி வந்திருப்பார். சி.ஆர்.பி.எப் வாகன பயணம் குறித்து அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துள்ளது” என்று விளக்கினார்.

இத்தாக்குதல் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ‘புல்வாமா தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் மிகப் பெரிய தவறிழைத்துள்ளார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று கூறியுள்ளார். புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ‘மிகவும் வேண்டப்பட்ட நாடு' என்ற அந்தஸ்தை வாபஸ் பெற்றுள்ளது இந்தியா. அதேபோல அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, சர்வதேச நாடுகளிடம், ‘தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானை நடவடிக்கை எடுக்க வையுங்கள்' என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 

 

மேலும் படிக்க  : காஷ்மீர் தீவிரவாதிகளின் அடுத்த அட்டாக்! – 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

.