ஷா பைசல் எம்.பி.பி.எஸ். படித்தவர்
Pune: அரசியல் மூலமே காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று ஷா பைசல் கூறியுள்ளார். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2010-ம் ஆண்டில் நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். தற்போது அவர் பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலுக்குள் நுழைந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஷா பைசல் கூறியதாவது-
அரசியல் மூலமே ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். தற்போதுள்ள நிலைமையை பார்க்கும்போது மத்திய அரசின் கவனத்தை காஷ்மீர் ஈர்க்க வேண்டும்.
ஏனென்றால், அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவது இன்னமும் காஷ்மீரில் நிறுத்தப்படவில்லை. மாநிலத்தில் நிலைமை இன்னும் சீரடையவில்லை.
ராணுவ நடவடிக்கை மூலம் காஷ்மீரில் அமைதியை கொண்டு வர முடியாது. அரசியல் மூலமே உறுதியான தீர்வை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.