Read in English
This Article is From Feb 10, 2020

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கும், காங். மூத்த தலைவர் பேத்திக்கும் நிச்சயதார்த்தம்!!

நிகில் குமாரசாமி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் ஆவார். அவரது நிச்சயதார்த்தத்தில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
இந்தியா Edited by

காங்கிரஸ் மூத்த தலைவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான எம். கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதி.

Bengaluru:

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகிலுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்துள்ளது. 

பிப்ரவரி 6-ம்தேதி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் நிகிலின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

நிகில் குமாரசாமி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் ஆவார். அவரது நிச்சயதார்த்தத்தில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
 

நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

30 வயதாகும் நிகில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 2016-ல் ஜாகுவார் என்ற திரைப்படத்தில் நிகில் அறிமுகம் ஆனார். புதிதாக புரொடக்சன் நம்பர் 1 என்ற திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

Advertisement

2019 மக்களவை தேர்தலில் நிகில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு, சுமலதா அம்பரீஷிடம் தோல்வி அடைந்தார். சுமலதா கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியாவார். 
 

Advertisement