This Article is From Feb 02, 2019

சிபிஐ-யின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கத்தை தொடர்ந்து, புதிய சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ-யின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

சிபிஐயின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷிகுமார் சுக்லா, இரண்டு காலம் பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

New Delhi:

சிபிஐ அமைப்புக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் கூடிய கூட்டத்தில் 

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்தது. 

dueqc6mg


இதைத்தொடர்ந்து, உடனடியாக புதிய சிபிஐ இயக்குநரை நியமிக்கும் பொருட்டு நேற்று மாலை பிரதமர் மோடியின் இல்லத்தில் புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாரஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிலையில், சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ரிஷிகுமார் சுக்லா, இரண்டு காலம் பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரிஷி குமார் சுக்லா கடந்த 1983ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானவர், மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

.