This Article is From Jun 22, 2020

பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொண்டு பேச வேண்டும்: மன்மோகன் சிங்

வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொண்டு பேச வேண்டும்: மன்மோகன் சிங்

ஹைலைட்ஸ்

  • பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொண்டு பேச வேண்டும்
  • எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை
  • வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும்.
New Delhi:

பிரதமர் அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொண்டு பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் "அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மன்மோகன் இவ்வாறு கூறியுள்ளார். 

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளனர். இந்த சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.

இதன்மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர். ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

கடந்த ஏப்ரல் 2020ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது.

இந்த விஷயம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும்.

வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, நமது எல்லையில் யாரும் ஊடுருவவில்லை. அவர்களால் எந்த ஒரு இந்திய முகாமும் கைப்பற்றப்படவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து, இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் தரப்பில் மோடியின் கருத்துக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. 

இதனிடையே, பிரதமர் மோடியின் கருத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. அப்படியென்றால், இந்தியாவை பிரதமர் மோடி சீனாவிடம் ஒப்படைத்து விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பிரதமர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சிலர் தவறான தகவல்களை கூறுகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உள்ளே முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

.