புதுச்சேரி முன்னாள் முதல்வரும், திமுக மூத்த தலைவருமான ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1988ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில திமுக பொருளாளராக பொறுப்பேற்றார். 1985ல் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்று, சட்டசபைக்கு சென்றார். 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தார்.
குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஏராளமான நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, ஜானகிராமன் நேற்று உயிரிழந்தார். இவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது சொந்த ஊரான ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அப்போது, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, ஜானகிராமனின் உடல் நேற்று காலை அவரது சொந்த ஊரான ஆலத்தூரில் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.