This Article is From Jan 04, 2020

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்!

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்!

1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். 

நெல்லை சேரன்மகாதேவியை சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (74). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பி.எச்.பாண்டியன் உயிரிழந்தார்.

கடந்த 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு நெல்லை மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்வாகியிருந்தார். பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.