அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்ததை தொடர்ந்து லோக்பால் குழுவுக்கு தலைவர் தேர்வாகிறார்.
ஹைலைட்ஸ்
- ஊழலுக்கு எதிரான முதல் தலைவராகிறார் பினாகி சந்திரா கோஷ்
- பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
- ஜெயலலிதா, சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்
New Delhi: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திர கோஷ், நாட்டின் முதல் லோக்பால் தலைவராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்பால் குழுவின் மற்ற உறுப்பினர்களில், 4 பேர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 4 பேர் ஓய்வு பெற அரசு அதிகாரிகளவும் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் பிப்ரவிரி மாதத்தில் விதித்த கெடுவை தொடர்ந்து இந்த குழு தேர்வு செய்யப்படுகிறது.
ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது.
இந்த மசோதா கடந்த 2013 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் உருவாக வழி ஏற்பட்டது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையில் ஏதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெறுவர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு நீதிபதியாக இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகியை பரிந்துரைத்தார். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழலில் சிறப்பு அழைப்பாளராக மல்லிகார்ஜூன கர்கேவை மத்திய அரசு அழைத்தது.
எனினும், சிறப்பு அழைப்பாழராக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பினாக்கி சந்திர கோஷ், அங்கிருந்து பதவி உயர்வு மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியக நியமிக்கப்பட்டார்.