This Article is From Jul 28, 2019

மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மனைவியும் இரட்டையர்களான மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்

குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

ஹைலைட்ஸ்

  • ஜெய்பால் ரெட்டி தன் 77வது வயதில் மறைந்தார்.
  • ஜெய்பால் ரெட்டியின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும்
  • அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
Hyderabad:

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சர்  ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி, ஐதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஐதராபாத் கச்சி பவுலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு மனைவியும் இரட்டையர்களான மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடியும் ஜெய்பால் ரெட்டியின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஜெய்பால் ரெட்டியின் இறப்பு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தன் வாழ்நாள் முழுவதையும் சமூக சேவைக்கே முழுமையாக அர்ப்பணித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முன்னாள் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் இறப்பினால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார். 

1970ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏவானார்.பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்தவர், குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
 

(with inputs from agencies)

.