நன்பாரா சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாதுரி வர்மாவின் கணவர் திலீப் வர்மா.
Bahraich (Uttar Pradesh): முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திலீப் வர்மா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திலீப் வர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உதவி மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் அடித்ததாக போலீசார் கூறினர்.
தற்போது பதவியிலிருக்கும் நன்பாரா சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாதுரி வர்மாவின் கணவர் திலீப் வர்மா ஆவார்.
போராட்டத்தின் போது தாசில்தார் அலுவலகத்தின் கதவு மூடப்பட்டதோடு வேலை கைவிடப்பட்டது. காவல் ஆய்வாளர் கவுரவ் குரோவர் கூறுகையில், தாசில்தார் மதுசுதன் ஆர்யா, திலீப் வர்மா மற்றும் 20-25 பேரின் மீது புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஆர்யா கூறுகையில், உள் காயங்களுடன் தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏவாக திலீப் வர்மா மஹாசி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ -வாக 1993 மற்றும் 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.