This Article is From Aug 25, 2018

கிருஷ்ணகிரியில் சிறப்பு முதலீட்டு மண்டலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

2,420 கோடி ரூபாய் செலவில் சிறப்பு முதலீட்டு மண்டலம் உருவாக்கப்பட உள்ளது

கிருஷ்ணகிரியில் சிறப்பு முதலீட்டு மண்டலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முதலீட்டு மண்டலத்துக்கான அடிக்கல்லை நடும் விழா இன்று நடந்தது. இந்த முதலீட்டு மண்டலம் மூலம், வட தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெருகும் என்று அரசு தெரிவிக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த சிறப்பு முதலீட்டு மண்டலம் தமிழக அரசு தொழில் வளர்ச்சி கார்ப்பரேஷன் (டிட்கோ) மற்றும் ஜி.எம்.ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்க இருக்கின்றன.

2100 ஏக்கர்கள் கொண்ட இந்த மண்டலம், தேன்கனிக் கோட்டை மற்றும் சூலகிரி தாலுக்காவில் அமைய இருக்கிறது. இங்கு, உலகத் தரம் வாய்ந்த சாலைகளும், கழிவு நீர் வடிகால்களும், நீர் மற்று கழிவுகள் சுத்தீகரிப்பு நிலையங்களும், மின்சாரம் மற்றும் இணைய சேவை போன்ற சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,420 கோடி ரூபாய் செலவில் இந்த மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. பணிகள் முடிய 7-8 ஆண்டுகளாகும். 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளையும், 60,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.