This Article is From Jan 23, 2019

2002 குஜராத் கலவரத்தின் குற்றவாளிகளுக்கு ஜாமின்..!

நால்வருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

2002 குஜராத் கலவரத்தின் குற்றவாளிகளுக்கு ஜாமின்..!

குஜராத் மாநில அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் 2002 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

New Delhi:

கடந்த 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 

நரோடா பாட்டியா வழக்கு என சொல்லப்படும் 2002 குஜராத் கலவர வழக்கில் உமேஷ்பாய் பார்வத், ராஜ்குமார், ஹர்ஷத் மற்றும் பிரகாஷ்பாய் ரத்தோட் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நால்வருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நால்வர் மீதான வழக்கை விசாரித்துத் தண்டனையை உறுதி செய்தது. 

இந்நிலையில் தங்களுக்குப் பிணை வழங்குமாறு 4 பேரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். அவர்களது வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குற்றவாளிகள் என சொல்லப்படும் 4 பேர் மீதான குற்றச்சாட்டு விவாதத்துக்கு உரியது' என்று சொல்லி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் 2002 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்துத் தான் கோத்ரா ரயில் எரிப்புக் கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்தில்தான் 59 இந்துக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நரோடா பாட்டியா தொடர்பான வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை விதித்தது. அப்போது நீதிமன்றம், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக அல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மிகச் சாதரணமான தண்டனை, நீதி மீதிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடும். 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது அவர்களுக்குச் சரியாக இருக்கும்' என்று கூறியது. 

 

.