This Article is From Aug 29, 2018

ஜம்மூ - காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீஸ் பலி!

போலீஸார் வாகனத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

ஜம்மூ - காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீஸ் பலி!
Shopian:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள அர்ஹமாவில் காவல் துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர்.

அர்ஹமா பகுதியில் காவல் துறை வாகனம் ஒன்று பழுதடைந்திருந்ததாகவும், அதை சரி செய்யவே போலீஸார் அங்கு சென்றனர் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் வாகனத்தில் பழுது நீக்கிக் கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதனால், 4 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தீவிரவாதிகள் காவல் துறையினரின் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

தீவிரவாதிகளை தேடும் பணியை காவல் துறை தரப்பு முடுக்கிவிட்டுள்ளது.
 

.