ஹைலைட்ஸ்
- தாய்லாந்தில் இருக்கும் குகைப் பகுதியில் ஜூன் 23 அன்று சிக்கினர் சிறுவர்கள
- சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
- சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடனே இருந்துள்ளனர்
MAE SAI, Thailand: தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் 4 பேரை பத்தரமாக மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி சிறுவர்கள் நிறைந்த ஒரு கால்பந்து அணி, தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்தில் இருக்கும் சியாங் ராய் பகுதியில் உள்ள தம் லுவாங் குகைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குகைக்குள் அவர்கள் அனைவரும் மாட்டிக் கொண்டுள்ளனர். தாய்லாந்தில் ஜூலை மாதங்களில் அடை மழை பெய்யும். இந்த நேரத்தில் தம் லுவாங் குகைக்குள் செல்வது பாதுகாப்பனதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால், கால்பந்து குழுவினர் சரியாக இந்த நேரத்தில் சென்றது தான் அவர்கள் உள்ளேயே மாட்டிக் கொண்டதற்குக் காரணமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் பதின் பருவத்தினர்.
இந்த விவகாரம் தாய்லாந்தில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் பெற்றது. சம்பவம் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்த உடன், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காகவே பயிற்சி பெரும் நபர்கள் சிறுவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல நாட்டு அரசுகளும் சிறுவர்களை மீட்க நிபுணர்களை அனுப்பி வைத்தது.
இந்நிலையில் 9 நாட்கள் குகையில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் 25 வயதாகும் அவர்களின் கோச் ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், குகையிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவது மிகுந்த சவால் நிறைந்தது என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று 4 சிறுவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணி தொடங்கப்பட்டது. அவர்கள் நால்வரும் தற்போது பத்திரமாக உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குகையிலிருந்து 4 சிறுவர்களும் வெளியே வந்த உடன் அவர்களை அங்கு தயார் நிலையிலிருந்து மருத்துவக் குழு பரிசோதித்தது. பின்னர், ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் சியாங் ராய் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
4 சிறுவர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர அனைத்து உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும், இதனால் மற்றவர்களை ஒருநாள் இடைவெளி விட்டுத்தான் அழைத்து வர முடியும் என்று மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து குகைப் பகுதியில் அடைமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போதைக்கு குகைக்குள் குறைந்த அளவிலான நீர் மட்டுமே தேங்கியுள்ளது. எனவே, மீட்புப் பணியை இப்போதே முடித்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
மீட்புப் பணியின் போது தாய்லாந்து சீல் படையைச் சேர்ந்த ஒரு வீரர் பிராண வாயு கிடைக்காமல் இறந்து போனார். இதனால், அனைத்து மீட்புக் குழுவினரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)