பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஃப்ரான்ஸ் அரசு ஜெய்ஷ்-இ-முகமது மைப்பின் தலைவரான மசூத் அஸாரின் அனைத்து சொத்துக்களை முடக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஃப்ரான்ஸின் நிதி அமைச்சகம் மற்றும் வெளியுறத்துறை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ''ஐரோப்பிய யூனியனின் முக்கியமான தீவிரவாதிகள் பட்டியலில் இணைக்க முடிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளது.
உலக நாடுகளின் முடிவுகளால் பாகிஸ்தான் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. இந்தயாவில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் உதவியுடன் தாக்குதல் நடத்துவதற்கு பல நாடுகள் கடும் கண்டனத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்து வருகின்றன.
பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.