இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸில் அனல் காற்று வீசியது.
ஹைலைட்ஸ்
- ஐரோப்பாவில் அனல் காற்று வீசி வருகிறது
- பிரான்ஸின் கார்பென்டரஸ் டவுனில் இந்த வெப்பநிலை பதிவானது
- இதற்கு முன்னர் பிரான்ஸில் 2003 ஆம் ஆண்டு அனல் காற்று வீசியது
Paris: பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக் கிழமை, 45 டிகிரி செல்ஷியஸுக்கு (113 டிகிரி ஃபேரன்ஹீட்) மேல் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வரும் நிலையில் பிரான்ஸில் இப்படி வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் மீட்டியோ-பிரான்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் இருக்கும் வில்லிவியல் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு சரியாக 45.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸில் அனல் காற்று வீசியது. அப்போது, 44.1 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதுவே, பிரான்ஸில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாக இருந்தது.