हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 11, 2019

பாக். பைலட்டுகளுக்கு ரஃபேல் விமான பயிற்சியா?- அதிர்ச்சியான இந்தியா; பிரான்ஸ் பதில் என்ன?

2015, மே 24 ஆம் தேதி, கதார், 24 ரஃபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்திருந்தது என்று டசால்டு நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல நாடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர்.

New Delhi:

பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானிகளுக்கு ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. இந்தத் தகவல் இந்திய அளவில் அதிர்ச்சி கிளப்பிய நிலையில், இந்தியாவுக்கான பிரானஸ் தூதர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ainonline.com என்கிற தளத்தில், ‘கதார் விமானப்படைக்காக 2017, நவம்பரில் ரஃபேல் விமான பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்படி பயிற்சி எடுத்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள்' என்று செய்தி வெளியிட்டது. 

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல நாடுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர். அதேபோல பாகிஸ்தான் ராணுவமும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவத் தளவாடங்களை வாங்கி பயன்படுத்தியுள்ளது. அப்படி கதார் நாட்டில் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளாக இருந்த பாகிஸ்தான் விமானப்படையினருக்குத்தான் ரஃபேல் நிறுவனம் பயிற்சி கொடுத்தது என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் இந்தியாவில் அதிர்வலைகள் ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பிரான்ஸ் நாட்டுத் தூதர், அலெக்சாண்டர் ஸீக்லர், ‘அந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை என்னால் உறுதிபட தெரிவிக்க முடியும்' என்று கூறியுள்ளார். 

Advertisement

2015, மே 24 ஆம் தேதி, கதார், 24 ரஃபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்திருந்தது என்று டசால்டு நிறுவனம் கூறியுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 6.3 பில்லியன் யூரோ என்றும், அதன் முதல் டெலிவரி இந்த ஆண்டு பிப்ரவரி 6-ல் இருந்தது என்றும் டசால்டு கூறியுள்ளது. 


 

Advertisement
Advertisement