This Article is From Dec 02, 2018

பிரான்சில் பல இடங்களில் கலவரம்: அவசர நிலை பிரகடனம் செய்ய வாய்ப்பு எனத் தகவல்!

பிரான்ஸ் நாட்டில் முகமூடி அணிந்த சிலர், பல இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பேருந்துகள், கட்டடங்களுக்கு கலவரத்தின் போது தீ வைக்கப்பட்டது. இதனால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம்

பிரான்சில் பல இடங்களில் கலவரம்: அவசர நிலை பிரகடனம் செய்ய வாய்ப்பு எனத் தகவல்!

அரசுக்கு எதிரான போராட்டம் நவம்பர் 17 ஆம் தேதி ஆரம்பித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.
  • அதிபர் மேக்ரன் இன்று அவசர சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்
  • பிரான்ஸில் இன்று பலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Paris:

பிரான்ஸ் நாட்டில் முகமூடி அணிந்த சிலர், பல இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பேருந்துகள், கட்டடங்களுக்கு கலவரத்தின் போது தீ வைக்கப்பட்டது. இதனால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாரீஸ் நகரத்தில் இன்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பின் செய்தித் தொடர்பாளர், பெஞ்சமின் கிரீவெக்ஸ், ‘அமைதியான முறையில் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரான்ஸில் எரிபொருளுக்கான வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்த நிலையில், இன்று அது கலரவமாக வெடித்துள்ளது எனப்படுகிறது. இது அரசு தரப்பை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நாட்டில் திடீரென்று வெடித்துள்ள இந்த கலவர சம்பவங்கள் குறித்து அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் எப்படி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. போராட்டத்துக்கு யார் தலைமை வகிப்பது, எந்த குழு ஒருங்கிணைக்கிறது என்பது தெரியவில்லை என்பதால், பேச்சுவார்த்தை நடத்துவது மேலும் கடினமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

vdo041k

அரசுக்கு எதிரான போராட்டம் நவம்பர் 17 ஆம் தேதி ஆரம்பித்துள்ளது. அதிலிருந்து சமூக வலைதளங்களில் போராட்டம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு, இன்று தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பெஞ்சமின், ‘அவசர நிலை பிரகடனப்படுத்துவதையும் அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் போராட்டத்துக்கு, ‘யெல்லோ வெஸ்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டித்தில் பங்கு பெற்றுள்ள பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர் மார்செல்லி, ‘இன்று பல்வேறு இடங்களில் கலவரம் நடந்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் காரணம் அரசுதான். செயல்படாமல் இருந்த அரசு தான் இந்த அனைத்துப் பிரச்னைக்கும் காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

.