Read in English
This Article is From Dec 05, 2018

‘கடனை  திருப்பி செலுத்த தயார்’ விஜய் மல்லையா பல்டி

9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் 62 வயதான விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறினார். 

Advertisement
இந்தியா
New Delhi:

நாட்டையே உலுக்கிய வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்க்கு தப்பி சென்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தான் பல வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுவதுமாக செலுத்தப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருந்த ட்விட்டரில் ‘கிங்விஷர் ஆர்லைன்ஸ் என்பது நல்ல நிறுவனம், எங்களுக்கு விமானத்திற்க்கு தேவைப்படும் எரிபொருள் மிக அதிகமான விலைக்கு (பேரல்க்கு சுமார் 140 $) வரை கொடுத்து வாங்கியதால் பெரியளவில் நஷ்டம் எற்ப்பட்டது. இதுவே வங்கி பணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியாததற்க்கு முக்கிய காரணம். நான் இப்பொழுது 100% வாங்கிய கடன்களை செலுத்த தயார். எடுத்துக் கொள்ளுங்கள்”   என தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மல்லையா தெரிவித்தார்.

இதற்க்கு முன்னர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கடன்களை அடைக்க தான் எல்லா வித முயற்சியும் செய்து வருவதாக விஜய் மல்லையா குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் தனது நிறுவனம் நாட்டின் கஜானாவிற்க்கு கடந்த முப்பது வருடங்கள் வருவாய் ஈட்டி வருவதாகவும் தனது பிரபலமான நிறுவனத்தை இந்தநாடு இழந்துவிட்டதாகவும் ஆனால் தான் பெற்ற கடன்களை முழுவதுமாக அடைக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

பல வங்கிகளில் தான் பெற்ற கடன் சுமார் 9,000 கோடி ரூபாய் திருப்பி செலுத்த முடியாத நிலையில் 62 வயதான தொழில் அதிபர் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறினார். 

Advertisement

இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மல்லையாவை நாடு திரும்ப கொண்டு வரும் முயற்சியை நடத்திவரும் நிலையில், லண்டனில் பதுங்கி இருந்த அவரை ஸ்காட்லாந்து போலீசாரிடம் இருந்து மீட்க வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement