This Article is From Feb 13, 2019

கிழக்கு அமெரிக்காவில் பனிப்புயல்... 1600 விமானங்கள் ரத்து!

இங்குள்ள தீவு பகுதிகளில் ஒரு அடிக்கு பனி மூடியுள்ளது. நியூயார்க்கில் 10 செமீ என்ற அளவிலும், பாஸ்டனில் 13 செமீ என்ற அளவிலும் பனி மூடியுள்ளது. இங்கு கடும் பனிபொழிவு துவங்கியுள்ளது என்று தேசிய வானிலை மைய இயக்குநர் டான் பீட்டர்சன் கூறியுள்ளார்.

கிழக்கு அமெரிக்காவில் பனிப்புயல்... 1600 விமானங்கள் ரத்து!

நியூயார்க்கில் 4 அடி வரை பனிபொழிவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

நியூயார்க்:

அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதியில் கடும் குளிர் நிலவி வந்தது. அது தற்பொது பனிப்புயலாக மாறியுள்ளது. மேலும் அப்பகுதிகளில் பனிக்கட்டி மழையும் பொழியத்துவங்கியுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நியூயார்க் மற்றும் பாஸ்டனில் நிலமை மோசமாகியுள்ளது. 

இங்குள்ள தீவு பகுதிகளில் ஒரு அடிக்கு பனி மூடியுள்ளது. நியூயார்க்கில் 10 செமீ என்ற அளவிலும், பாஸ்டனில் 13 செமீ என்ற அளவிலும் பனி மூடியுள்ளது. இங்கு கடும் பனிபொழிவு துவங்கியுள்ளது என்று தேசிய வானிலை மைய இயக்குநர் டான் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இந்த பனிப்பொழிவால் பெரிய நகரங்கள் விரைவாக பனியால் மூடப்பட்டு வருகின்றன. கடும் பனி இப்போது பனிக்கட்டி மழையாக மாறியுள்ளது. இதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சிலர் இதில் சறுக்கி விழுகின்றனர். விபத்துகள் உண்டாகுவதாகவும் பீட்டர்சன் தெரிவித்தார்.

பனிப்புயலால் இலின்யோஸ் மற்றும் மிட்சிகன் மாகாணங்களை பனி சூழ்ந்துள்ளது. பனிப்புயல் விஸ்கான்ஸின் மற்றும் தெற்கு நியூயார்க்கை விரைவில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வந்து செல்லும் 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிகாகோ, நியூயார்க் மற்றும் போஸ்டனில் அதிக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பனிப்புயலுக்கு முன்பு நியூ ஜெர்ஸி கவர்னர் பில் முர்பே மாகாணத்தில் அவசரநிலையை அமல்படுத்தியுள்ளார். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.