Read in English
This Article is From Oct 11, 2018

‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ரிலையன்ஸ் பார்ட்னர்ஷிப் கட்டாயம்!’- பகீர் கிளப்பும் அறிக்கை

டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் உள்ளறிக்கை ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது

Advertisement
இந்தியா

Highlights

  • Partnership with Reliance a "trade-off" for Rafale deal, report claims
  • Dassault said it "has freely chosen" to partner with Anil Ambani's firm
  • Francois Hollande had claimed Indian government proposed Reliance Defence
New Delhi/Paris:

ரஃபேல் ஒப்பந்தம் (Rafale Fighter Jet Deal) குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் உள்ளறிக்கை ஒன்றை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டியது கட்டாயம் என்று டசால்ட் தெரிவித்துள்ளது’ குறிப்பிடப்பட்டுள்ளது. 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறது.

Advertisement

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பு, ‘எந்த வித ஆதாரமுமின்றி காங்கிரஸ் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்களை சொல்லி வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தை போடுவது குறித்து முதன் முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்’ என்று பதில் வாதம் வைத்துள்ளது. 

இப்படி இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார். 

Advertisement

இது சம்பந்தமாக தற்போது ‘மீடியாபார்ட்’ என்கின்ற பிரஞ்சு புலனாய்வு பத்திரிகை, டசால்டு நிறுவனதின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள டசால்டு நிறுவனம், ‘பிப்ரவரி 10, 2017-ல் டசால்டு ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. ரிலையன்ஸோடு மட்டும் நாங்கள் கூட்டு சேர்ந்து விமானங்களை தயாரிக்கப் போவதில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி, மகேந்திரா, கைனட்டிக், மயினி போன்ற நிறுவனங்களும் எங்களுடன் இணைந்துள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் இணையும்’ என்று விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement