This Article is From May 28, 2019

''இலங்கை செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்'' - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்!!

ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

Advertisement
இந்தியா Edited by

3 சர்ச்சுகள் மற்றும் 3 ஆடம்பர ஓட்டல்களில் குண்டுவெடிப்பு நடந்தது.

New Delhi:

இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து இலங்கையில் பல இடங்களில் வன்முறை நடந்தன. 

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, சமூக வலை தள பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. 

தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் முக்கியமான அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளது. 

Advertisement

இதன்படி இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

Advertisement