இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.
Chennai: சென்னையை அடுத்த சேலையூர் சுந்தரம் காலனியில் ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியதில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வெடித்துச் சிதறிய சத்தம் அவ்வளவாக கேட்கவில்லை என்று தெரிகிறது. புகை வெளிவந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்ததில் செய்தியாளர் பிரசன்னா, அவரது தாயார் ரேவதி, மனைவி அர்ச்சனா ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மின் கசிவு ஏற்பட்டு ஃபிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.