বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 17, 2018

புது மணத் தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு… கலக்கிய நண்பர்கள்!

மாப்பிள்ளையின் நண்பர்கள் மேடைக்கு வந்து, 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய கேன் ஒன்றை பரிசாத தந்துள்ளனர்

Advertisement
தெற்கு

பெட்ரோல் விலை அதிமாகியுள்ளதால் அதை பரிசாக தரலாம் என்று முடிவெடுத்தோம், மாப்பிள்ளையின் நண்பர்கள் (கோப்புப் படம்)

Highlights

  • மாப்பிள்ளையின் நண்பர்கள் தான் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாத தந்தனர்
  • இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானது
  • தமிழகத்தில் பெட்ரோல் பரிசு 85 ரூபாயைத் தாண்டியுள்ளது
Cuddalore:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடலூரில் திருமணம் செய்து கொண்ட புது மணத் தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக தந்துள்ளனர் மாப்பிள்ளையின் நண்பர்கள். 

கல்யாணம் முடிந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர் கடலூரைச் சேர்ந்த புது மணத் தம்பதி. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மேடைக்கு வந்து, 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிய கேன் ஒன்றை பரிசாக தந்துள்ளனர். இதை தம்பதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். இந்த சம்பவத்தின் 39 நொடி வீடியோ தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதனால், இந்த சம்பவம் மாநில அளவில் வைரலானது.

இது குறித்து பரிசு கொடுத்த நண்பர்கள், ‘தமிழகத்தில் பெட்ரோலின் விலை 85 ரூபாயைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது நாட்டிலேயே அதிகமான விலைகளில் ஒன்று. எனவே தான், எரிபொருளை பரிசாக தரலாம் என்று முடிவு செய்தோம்’ என்று நகைப்புடன் தெரிவித்தனர். 

உயர்ந்து வரும் எரிபொருள் விலை குறித்து பேசிய பாஜக-வின் தலைவர் அமித்ஷா, ‘எங்கள் கட்சித் தரப்பும் அரசு தரப்பும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்துக்கு வேண்டிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சீக்கிரமே ஒரு நல்ல தீர்வு எட்டப்படும்’ என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement