This Article is From Jul 05, 2020

திருச்சி உள்பட 7 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை என ஐந்து மாவட்டங்கள் மற்றும், விழுப்புரம், திண்டுக்கல் மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் பணிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி உள்பட 7 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

சமீபத்தில் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான தந்தை மகன் என இருவர் காவல்துறையினரின் பொறுப்பில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல்துறையினருடன் சேர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்தவர்களும் உயிரிழந்த வியாபாரிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்ய வேண்டும் என பல ஜனநாக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு 2 மாத தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

.