New Zealand Mosque Shooting: வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து: நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி காயமின்றி தப்பித்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் ஜலால் யுனஸ் கூறும் போது ''அனைத்து வீரர்களும் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிக்கு புறப்பட்டு தயாராக இருந்தனர். அவர்கள் நுழைவதற்கு சற்று முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
பங்களாதேஷ் துவக்க வீரர் தமீம் இக்பால் தனது ட்விட்டரில் ''மொத்த அணியும் தாக்குதல் காரர்களிடமிருந்து தப்பித்துள்ளது. பயங்கரமான அனுபவம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் பலர் கொல்லப்பட்டதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது ட்விட்டில் ''அல்லா இன்றைய தாக்குதலிலிருந்து எங்களை காப்பாற்றியுள்ளார்'' என்று கூறினார்.
அணியின் அனலிஸ்ட் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன் ''நூலிழையில் தப்பித்தோம். இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. எல்லாரும் பதட்டமாக உள்ளனர்" என்றார்.
அணியுடன் பயணித்த பங்களாதேஷ் நிருபர் மஸார் ''நாங்கள் மசூதி அடைந்தபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தது'' என்று கூறினார்.
அணி வீரர்கள் பேருந்துக்குள் இருந்ததாகவும், அறிவிப்பு வரும் வரை வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் படிக்க : நியூசி., மசூதியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி! - உயிர்தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்!