This Article is From Jan 07, 2020

ஜேஎன்யூ பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு!

JNU mob attack: ஜே.என்.யூ தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக உள்ளது, "என்று இந்து ரக்‌ஷா தளத்தின் பிங்கி சவுத்ரி கூறியுள்ளார்.

JNU mob attack: இந்து ரக்‌ஷா தளத்தை சேர்ந்த பிங்கி சவுத்ரி, தங்களது அமைப்பின் உறுப்பினர்களே பொறுப்பு என்று கூறியுள்ளார்.

New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த முகமூடி கும்பலின் கொடூரத் தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு தான் தாக்குதல் நடத்தியதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனிடையே,  ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கணினி சர்வர் அறை சூறையாடப்பட்டது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் யூனியன் மற்றும் பல்கலை நிர்வாகம் இடையே பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது.

இதில், பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி கும்பல் தாக்குதல் நடத்தியத்கு முன்தினம், ஜன.4ம் தேதி சர்வர் அறையை அடித்து நொறுக்கியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று முகமூடி கும்பல் நடத்திய தாக்குதலில் பல்கலை மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான நகரங்களில் ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக இந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி செளதரி தெரிவித்துள்ளார். அதில் அவர், தேசவிரோத, இந்து விரோத நடவடிக்கைகள் நடைபெற்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தேச விரோத நடவடிக்கைகள், வேறு எந்த பல்கலைக்கழகங்களில் நடைபெற்றாலும் அங்கும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 
 

.