This Article is From May 11, 2020

டெல்லியில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தில் இருந்து 7,000ஆக அதிகரிப்பு!

Coronavirus: மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,233 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தில் இருந்து 7,000ஆக அதிகரிப்பு!

பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கெஜ்ரிவால் தகவல்

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் கொரோனா பாதிப்பு 1000த்தில் இருந்து 7,000ஆக அதிகரிப்பு!
  • குணமடைந்து வீடு திரும்பி வரும்புவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
  • மொத்தமாக 73 பேர் தொற்றுநோயால் உயிரிழப்பு
New Delhi:

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 7,000ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 310 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,233 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 60 பேர் குணமடைந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கை 2129 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 73 பேர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ல் இருந்து, 7,000ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்.11ம் தேதி 1,000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கையானது, 10 நாட்களில் இருமடங்காக அதிகரித்தது. 

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக இரட்டிப்பாக பாதிப்பு அதிகரித்து வருவது 12 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம், 10.6 என்ற கணக்கில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

தலைநகரில் ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்தியதே, இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். 

கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஊரடங்கை தளர்த்த டெல்லி தயாராக உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளையும் அவர் தளர்த்தி அறிவித்தார். 

மேலும், டெல்லி மீண்டும் செயல்படுவதற்கான நேரம் இது என்று கூறிய அவர், நாம் கொரோனா வைரஸூடன் வாழ தாயாராகிகொள்ள வேண்டும் என்று கூறினார். 

இதுதொடர்பாக நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அதே சமயம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். 

.