This Article is From Aug 14, 2019

வீடில்லா டெல்லி இளைஞர் புகைப்பட கலைஞராக முன்னேறி ஃபோர்பஸ் பத்திரிகையில் இடம் பெற்ற கதை

விக்கி ராய் தாபாவில் பாத்திரம் கழுவி அங்கு சாப்பிட்டவர்கள் மிச்சம் வைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.

வீடில்லா  டெல்லி இளைஞர் புகைப்பட கலைஞராக முன்னேறி ஃபோர்பஸ் பத்திரிகையில்  இடம் பெற்ற கதை

பிரபலான ‘ஹியுமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஃபோர்பஸ் ஆசிய பத்திரிகை வெளியிட்ட '30 வயதிற்குட்பட்ட 30 பேர்' பட்டியலில் இடம்பெற்ற  டெல்லியில் தெருவில் வசித்து முன்னேறிய  புகைப்பட கலைஞரின் வாழ்க்கை ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. 

ஃபோர்பஸ் பத்திரிகையில் இடம் பெற்ற விக்கி ராய் தன்னுடைய வாழ்க்கையை பிரபலான ‘ஹியுமன்ஸ் ஆஃப் பாம்பே' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களின்  லைக்குகளை பெற்று குவித்துள்ளது. 

விக்கி ராய் தனது 11 வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்று வீட்டைவிட்டு ஓடி டெல்லிக்கு வந்துள்ளார். ஆனால் இங்கு வந்த போது ரயில்களில் தண்ணீர் விற்று மைதானத்தில் தூங்கியுள்ளார்.  இந்த வேலையினால் பசியினால் சாகவில்லை என்கிறார்.

விக்கி ராய் தாபாவில் பாத்திரம் கழுவி அங்கு சாப்பிட்டவர்கள் மிச்சம் வைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். 

கைவிடப்பட்ட குழந்தைகளை மறுவாழ்வுக்கு உதவும் ‘சலாம் பாலக்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மருத்துவரைக் காணும் வரை இந்த வாழ்க்கையில்தான் இருந்துள்ளார். தன்னார்வ தொண்டு அமைப்பினர் தத்தெடுத்த பின் என் வாழ்க்கை நன்றாக இருந்தது. நான் ஒரு நாளைக்கு 3 வேளை  உணவு, அணிய வேண்டிய உடைகளும் தங்குமிடமும் கிடைத்தது” என்று ராய் கூறுகிறார். “அவர்கள் பள்ளியிலும் சேர்த்தாக” தெரிவித்தார். 

இந்நிலையில் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் அவர்களை பார்வையிட்டார். ராய் அவரது வேலையால் ஈர்க்கப்பட்டார். 

தெருக்களில் வாழ்வது எனக்கு முன்பு அறிந்திராத மனித நேயத்தின் நிழல்களைக் காட்டியது. மேலும் அவரைப் போலவை புகைப்படங்களை எடுக்க விரும்பினேன் என்று அவர் கூறுகிறார்.

18 வயதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் அவருக்கு ரூ.499 மதிப்புள்ள கேமரா ஒன்றினை கொடுத்துள்ளது. உள்ளூர் புகைப்படக் காரருடன் இண்டர்ஷிப் செய்துள்ளார். அதன் பிறகு தன் லட்சியத்தில் இருந்து பின்வாங்கவில்லை. 

விக்கி ராய் தன்னுடைய புகைப்படக் கண்காட்சியை ‘ஸ்ட்ரீட் ட்ரீம்ஸ்' என்ற தலைப்பில் வைத்தார். “மக்கள் என் புகைப்படங்கள் வாங்கத் தொடங்கினார்கள். நான் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது” என்று மகிழ்ச்சியாக கூறினார்.

“இந்த அளவிற்கு என் வாழ்வின் விதியை மாற்ற முடியும் என்று நினைத்து பார்த்ததில்லை”

அவரது வலைத்தளத்தில் கிடைத்த தகவல்படி 2014 ஆம் ஆண்டில் எம்.ஐ.டி மீடியா ஃபெல்லோஷிப் வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஃபோர்பஸ் ஆசியா 30இன் கீழ் 30 பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

Click for more trending news


.