This Article is From Feb 08, 2019

அமெரிக்க பனியில் உறைந்து உயிர்பிழைத்த பூனை!

''பூனை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உறைந்திருந்தது. உடல் வெப்பநிலை மைனஸ் 90 டிகிரியிலும், உடல் உள்ளே 101 டிகிரியிலும் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க பனியில் உறைந்து உயிர்பிழைத்த பூனை!

ப்ளுஃபி எனும் இந்த பூனையின் உரிமையாளர்கள் அந்த பூனையை பனிக்கட்டியால் உறைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

மருத்துவத்தில் "உங்கள் உடல் வெப்பமாக இருக்கும் வரை நீங்கள் இறக்கவில்லை" என்ற அர்த்தம் படும் ஒரு உண்மை உண்டு. அது தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு பூனைக்கும் பொருந்தியுள்ளது. 

அமெரிக்காவின் மிட்வெஸ்ட் பகுதி கிட்டத்தட்ட துருவபகுதியாகவே மாறிவிட்டது. கடந்த வார இறுதியில் தான் வெப்பநிலை பூஜ்ஜியத்தை தொட்டது. அதுவரை மைனஸில் இருந்துவந்தது. மோன்டோனா பகுதியை சேர்ந்த பூனை ஒன்று இந்த கடும் பனியால் பாதிக்கப்பட்டது.

ப்ளுஃபி எனும் இந்த பூனையின் உரிமையாளர்கள் அந்த பூனையை பனிக்கட்டியால் உறைந்த நிலையில் கண்டெடுத்துள்ளனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தது பூனையின் உயிரை காப்பாற்றியுள்ளது.

hml6gnto

மருத்துவமனையில் சிகிச்சையளித்த மருத்துவர் ''பூனை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உறைந்திருந்தது. உடல் வெப்பநிலை மைனஸ் 90 டிகிரியிலும், உடல் உள்ளே 101 டிகிரியிலும் இருந்தது. 

பிறகு பூனையை சுடுதண்ணீரில் காய வைத்து துடைத்து பல மணி நேரப்போராட்டத்துக்கு பின் மீட்டோம்" என்றார்.

"முழுவதுமாக உறைந்ததால் மீண்டு வர காலமெடுத்ததாகவும், காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும்" கூறினர். இன்னும் ஒருவாரகாலம் சிகிச்சை தேவைப்படும் என்று கூறியுள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.