This Article is From Jun 05, 2018

நிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!

நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது

நிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!

None of the samples of the fruit bats showed any signs of Nipah genomes

ஹைலைட்ஸ்

  • இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவ துவங்கிய நிபா வைரஸ்
  • வௌவால்கள் காரணமில்லை என ஆய்வில் கண்டுபிடிப்பு
  • என்ன காரணம் எனத் தொடரும் ஆராய்ச்சி
Kerala: நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது. ஆனால், இதுவரையில் நிபா வைரஸ் பரவுவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 

சமீபத்தில் பழந்திண்ணி வெளவால்களின் 13 மாதிரிகள், தேசிய விலங்குகள் நோய்களுக்கான உயர் பாதுகாப்பு மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவை யாவும் காரணமில்லை எனப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. மேலும், முயல்களின் மாதிரிகளும் எதிர்மறை முடிவையே தந்துள்ளன. இதுபோல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுவது இது இரண்டாவது முறை. முதல் முறையில், பன்றிகள், ஆடுகள், பசுக்கள், பூச்சி வெளவால்கள் ஆகியவையின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அவை யாவும் நிபா வைரஸ் பரவுவதற்கான காரணங்கள் இல்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் பரவிய இந்த நிபா வைரஸால் இதுவரையில் 16 பேர் பலியாகி உள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், “முதல் கட்ட பரவலை தடுத்துவிட்டோம். ஆனால், இரண்டாம் கட்ட பரவலில் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் தயாராகவே உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

நிபா வைரஸ் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள வீட்டில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதில், ஒரே வீட்டைச் சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்தனர். அந்த வீட்டில் உள்ள கிணறில் இருந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான வெளவாலால் தான் வைரஸ் பரவியதாக அரசு தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை வளர்ப்புத் துறை இயக்குநர் கூறுகையில், “நிபா வைரஸ் தொடர்பான அறிகுறிகளை இதுவரையில் நாங்கள் அனுப்பிய எந்தவொரு மாதிரியும் உறுதி செய்யவில்லை. தொடர்ந்து நாங்கள் பரிசோதித்து வருகிறோம்” என்றார்.
.