This Article is From May 03, 2019

எவரெஸ்ட் சிகரத்தையும் தாக்கிய ஃபனி புயல்; 20 முகாம்கள் காற்றில் பறந்தன!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசாவை துவம்சம் செய்து வருகிறது. இதன் தாக்கம் எவரெஸ்ட் வரைக்கும் சென்றிருக்கிறது.

எவரெஸ்ட் சிகரத்தையும் தாக்கிய ஃபனி புயல்; 20 முகாம்கள் காற்றில் பறந்தன!!

6,400 மீட்டர் உயரத்தில் உள்ள முகாம்கள் சேதம் அடைந்திருக்கின்றன.

Kathmandu, Nepal:

ஃபனி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரம் வரை சென்றிருக்கிறது. அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்திருக்கின்றன. 

வங்க கடலில் உருவான ஃபனி புயல் சென்னை வழியே கரையை கடந்து தமிழகத்திற்கு நல்ல மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒடிசாவுக்கு சென்று அங்கு மழையையும், சற்று அழிவையும் ஃபனி அளித்துக் கொண்டிருக்கிறது. 

மரங்களும், மின் கம்பங்களும் ஃபனியின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளன. இதனால் தொலைத் தொடர்பு, மின் வசதிகள் உள்ளிட்டவை புரி மற்றும் புவனேஸ்வரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் ஃபனி புயலின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 6,400 மீட்டர் உயரத்தில் 2-வது மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஃபனி புயலால் அங்குள்ள 20 முகாம்கள் காற்றில் பறந்திருக்கின்றன. இருப்பினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனைத் தொடர்ந்து எவரெஸ்ட் ட்ரெக்கிங் நிறுவனங்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ட்ரெக்கிங் செல்வோரின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

.