ரயில் பயணத்தின் போது யாரும் பசியால் உயிரிழக்கவில்லை; கிசன் ரெட்டி (Representational)
New Delhi: ரயில் பயணத்தின் போது யாரும் பசியால் உயிரிழக்கவில்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் கிசன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தின் போது பசியால் 10 பேர் வரை உயிரிழந்ததாக, வெளியான செய்திகள் போலியானவை என்று அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ரயில் பயணத்தின் போது யாரும் பசியால் உயிரிழக்கவில்லை, அதுபோன்ற தகவல்கள் போலியானவை. இதுபோன்ற வதந்திகளை பரப்புவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும், தகவலுக்கு பிரதேச பரிசோதனை அறிக்கைகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்காக தலைநகர் டெல்லியில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அவர்களுக்காக சிறப்பு ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, ரயில்வே அவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)