Read in English
This Article is From Jul 02, 2019

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்! - ரஷ்யாவுடன் இந்தியா முக்கிய ஒப்பந்தம்!!

ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ. 9,023 கோடியை மத்திய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கியது. 2022-ல் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Edited by

விண்ணுக்கு செல்பவர்களில் பெண் ஒருவரும் இருப்பார் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்திருந்தார்.

Bengaluru:

விண்வெளித்துறையில் அடுத்தடுத்து சாதனை நிகழ்த்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ, 2022-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்டவற்றுக்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 

சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நிறைவேற்றிய நிலையில், அடுத்ததாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு அதற்காக ரூ. 9,023 கோடியை கடந்த ஆண்டு ஒதுக்கியது. 2022-ல் இந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விடும் என தெரிகிறது. 

Advertisement

முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளதால், அதற்கு விண்வெளித்துறையில் வளர்ந்த நாடான ரஷ்யாவின் உதவி தேவைப்படுகிறது. இதையடுத்து ரஷ்ய நிறுவனமான க்ளாகோமோஸ் உடன் இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

க்ளாகோமேஸ் என்பது ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோஸின் துணை பிரிவு ஆகும். விண்ணுக்கு செல்லும் ஆட்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்டவற்றை க்ளாகோமோஸ் மேற்கொள்ளும். 

Advertisement
Advertisement