நிலைமையை கவனத்தில் கொண்டு விடுமுறை வழங்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கரையை கடந்து வருகிறது. முன்னரே எதிர்பார்த்ததைப் போன்று கடலோர மாவட்டங்களில் பாதிப்பைகளை கடுமையாக்கி விட்டு புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சுமார் 10-க்கும் அதிகமான மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் மட்டும் மின்சேவை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் படிக்க - "கரையைக் கடந்த கஜா… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..?"
இந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக பின்வரும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு - 1. தஞ்சை, 2. திருவாரூர், 3. ராமநாதபுரம், 4. கடலூர், 5. அரியலூர், 6.நாகை, 7. சிவகங்கை, 8.புதுக்கோட்டை, 9. மதுரை, 10. தேனி, 11. விழுப்புரம், 12. திண்டுக்கல், 13. திருப்பூர், 14. திருச்சி, 15. பெரம்பலூர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் :
1. விருதுநகர், 2. தூத்துக்குடி, 3. கரூர், 4. ஈரோடு, 5. சேலம். 6. கோவை
நிலைமையை பொறுத்து விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை உயரக்கூடும்.
சென்னை எழும்பூரிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் வேளாங்கன்னி விரைவு ரயில், மன்னார்குடி விரைவு ரயில், தஞ்சாவூர் செல்லும் உழவன் விரைவு ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.