பாதிப்பை பொறுத்தை நாளையும் விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புயல் பாதிப்பு அதிகம் இருப்பின், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் வேளாங்கன்னி விரைவு ரயில், மன்னார்குடி விரைவு ரயில், தஞ்சாவூர் செல்லும் உழவன் விரைவு ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.