வங்கக்கடலில் உருவான ‘கஜா' புயல் கரையைக் கடந்துள்ளது. தற்போது புயல் திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது.
மேலும் படிக்க - "தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை"
புயல் எதிரொலியை அடுத்த தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், ‘காலை 6 மணிக்கு கஜா புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிரப்பிட்டி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும் படிக்க - "ஆயிரக்கணக்கான மரங்களை சாய்த்த கஜா - மின்சேவை துண்டிப்பு"
மேலும், திருச்சி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்' என்று தெரிவித்துள்ளது.