கஜா புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலமாக ரூ. 108 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு நிவாரண பணிகளை வழங்க நிதி வழங்குமாறு கடந்த 19-11-2018 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
இதனை எற்று ஆன்லைன் மூலமாக தற்போது வரைக்கும், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 108 கோடியே 34 லட்சத்து, 99 ஆயிரத்து 624 திரட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.